அரசு வங்கிகளின் பண்டிகைக் கால வீட்டுக் கடன் மேளா!
டெல்லி: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டாயிஷ் வங்கி, ஐஎன்ஜி வைஸ்யா மற்றும் பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகியவை வீட்டுக் கடன் பெறுவதை மேலும் எளிமையாக்கும் வேலையில் இறங்கியுள்ளன.
இந்த தீபாவளிக்கும் மேலும் பல ஆயிரம் புதிய வீடுகளில் வாடிக்கையாளர்களை தீபமேற்ற வைத்துவிட வேண்டும் என்ற வேகத்தில், கடந்த ஆறு மாதங்களில் அளித்ததைவிட அதிக வீட்டுக் கடன்களை வழங்க திட்டமிட்டுள்ளன.
பொருளாதாரம் முன்னிலும் வேகமாக சீரடைந்து வருகிறது. பணப் புழக்கமும் அதிகரித்துள்ளது. எனவே வாடிக்காயாளர்களுக்கு அதிக வீட்டுக்கடன்களை குறைந்த வட்டியில் வழங்க முடிவு செய்துள்ளன.
மேலும் ஐஎன்ஜி வைஸ்யா மற்றும் பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகிய இரண்டும் வாடிக்கையர் செலுத்த வேண்டிய விளிம்புத் தொகையை 25-30 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளன.
இதனால் ரூ.25 லட்சம் வீட்டுக் கடன் வாங்க ரூ.6.5 லட்சம் வரை விளிம்புத் தொகை செலுத்த வேண்டியிருந்த வாடிக்கையாளர்கள் இனி ரூ.3.5 லட்சம் வரை செலுத்தினாலே போதும் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது.
இதைப் பார்த்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் இப்போது விளிம்புத் தொகையை 30 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைத்துவிட்டது.
அடுத்து விஜயதசமி, தசரா, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என பண்டிகைகள் வரிசை கட்டி நிற்பதால், இந்த மங்கல நாளில் முதலீடு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது சலுகைகளை அறிவிக்க உள்ளன இந்த வங்கிகள்.
நல்ல வாடிக்கையாளர்களை நமது வர்த்தகத்துக்குள் இழுப்பது மட்டுமே முக்கியமல்ல... அவர்களது முதலீடு, லாபத்தைப் பெருக்கும் வகையில் வங்கிகள் உதவுவதும் முக்கியம்தான். அதைச் செய்ய வங்கிகளுக்கு இது நல்ல தருணம் என்கிறார் பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியின் புதிய தலைவர் ஜி கே வேடி.
நல்லாத்தான் இருக்கு கேட்க. நடந்தா சரி!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications