அத்வானி ஊசிப் போன ஊறுகாய்-பாரிக்கர்
பனாஜி: ஊறுகாயை சில நாட்கள் தான் பயன்படுத்த முடியும். அதை தொடர்ந்து வைத்திருந்தால் கெட்டுவிடும். அது போல அத்வானியும் ஊசிப் போன ஊறுகாய் போல ஆகி விட்டார். அவரது அரசியல் வாழ்க்கை கிட்டதட்ட முடிந்துவிட்டது என பாஜக மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான மனோகர் பாரிகர் வரும் டிசம்பரில் ராஜ்நாத் சிங்கின் பதவி காலம் முடிந்தவுடன் அடுத்த பாஜக தலைவராக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். ஆர்எஸ்எஸ் ஆதரவைப் பெற்ற இவர் பனாஜியில் நிருபர்களிடம் பேசுகையில்,
அத்வானி இன்னும் ஒரிரு ஆண்டுகள் தான் அரசியலில் இருப்பார். வயதான காரணத்தால் அவரது அரசியல் வாழக்கை நீண்டநாள் ஆன ஊறுகாய் போல் ஊசிப் போய் விட்டது.
பொதுவாக ஊறுகாய்களை சில நாட்கள் தான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் அவற்றை வைத்திருந்தால் அது கெட்டுவிடும். அத்வானியின் அரசியல் வாழ்க்கை கிட்டதட்ட முடிந்துவிட்டது. ஆனால், அவர் எங்களுக்கு ஒரு ஆசிரியர் போலிருந்து எப்போதும் வழிகாட்டுவார்.
அவர் தேசிய ஒருமைப்பாடு மிக்க தலைவர். உறுதியானவர். இந்த வகையில் அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
பாஜக இளமையும், நம்பிக்கையும் கொண்ட கட்சியாக மாற வேண்டும். அதற்காக நான் மூத்த தலைவர்களுக்கு எதிரானவன் என்று சொல்ல முடியாது. பாஜகவில் 40 முதல் 60 வயது உள்ள தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் 54 வயதான பாரிக்கர்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications