லஞ்சம்-உணவுத்துறை அதிகாரிகள் சிபிஐ வழக்கு
சென்னை: சென்னையில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இந்திய உணவு கழகத்தை சேர்ந்த 8 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் நடைபெறும் மாதாந்திர கூட்டத்தின் போது இந்திய உணவு கழகத்தை சேர்ந்த மேலாளர்கள் சிலர் பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளருக்கு லஞ்சம் கொடுப்பதாக சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் கடந்த 18ம் தேதி நடந்த மாதாந்திர கூட்டத்தின் போது அதிரடி சோதனை நடத்தினர். சிபிஐ அதிகாரிகள் வருவதை பார்த்த பொது மேலாளர் ஜெயக்குமார் (56) தன்னிடம் இருந்த ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்தை தனது உதவியாளர்கள் மூலம் மறைக்க பார்த்தார்.
ஆனால், சிபிஐ போலீசார் அவரை பிடித்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் துணை பொது மேலாளர் துரைராஜின் இருப்பிடத்தில் அங்காங்கே ஒழித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 49 ஆயிரத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து சிபிஐ போலீஸார் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள இவர்கள் இருவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது பல கோடி மதிப்பிலான சொத்து விவரங்கள் சிக்கியுள்ளது.
பின்னர் சிபிஐ போலீஸார் லஞ்சப் பணம் கொடுத்த மேலாளர்கள் வெள்ளிமலையான்(கோயம்புத்தூர்), ஜெகன்நாதன் (தூத்துக்குடி), சௌந்திரம்(வேலூர்), பன்னீர்செல்வம்(தஞ்சாவூர்), சந்திர மோகன் தாஸ்(கடலூர்) மற்றும் குமார் (சென்னை) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் 6 பேர் மீதும் பதவியை துஷ்பிரோயகம் செய்தது(பிரிவு 13, 1 டி ), லஞ்சம் கொடுத்தது, கிரிமினல் சதி செய்தது (பிரிவு 120 பி) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் பொது மேலாளர் ஜெயக்குமார் மற்றும் துணை பொது மேலாளர் துரைராஜ் ஆகியோரை கைது செய்ய முடிவு செய்தனர். ஆனால், அவர்கள் இருவரது உடல்நலன் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்படவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications