கருணாநிதியிடம் புதுவை கண்ணன் ஆசி
சென்னை: புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் கண்ணன், முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து ஆசி பெற்றார்.
புதுச்சேரியில் இருந்து தேர்ந்து எடுக்கப்படும் ராஜ்யசபா எம்.பி.க்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வேட்பாளராக கண்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 3வது முறையாக காங்கிரஸில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோருடன் கண்ணன் இன்று சென்னை வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றார்.
புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் ஜானகிராமன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், எம்.எல்.ஏ.க்கள் வி.எம்.சி.சிவக்குமார், எஸ்.பி.சிவக்குமார், ஆர்.சிவா, ராஜாராமன் ஆகியோர் உடன் வந்தனர்.
பின்னர் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். மேல்- சபை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கண்ணன் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல திட்டங்களை புதுச்சேரியிலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம்.
மூத்த தலைவரான கருணாநிதி தலைமையில் அமைந்துள்ள தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது என்றார் நாராயணசாமி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications