நளினிக்கு ஆதரவாக 13 கைதிகள் உண்ணாவிரதம்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுதலை செய்யக் கோரி அவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து புழல் மத்திய சிறையில் 13 கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
18 வருடங்களாக சிறையில் அடைபட்டுள்ள தன்னை விடுதலை செய்யக்கோரி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நளினி போராடி வருகிறார். சிறையில் இருந்தபடியே பல்வேறு மனுக்களை கொடுத்துள்ளார். வழக்கும் தொடர்ந்தார்.
இந்த நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில், புழல் சிறையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள அல்- உம்மா அமைப்பைச் சேர்ந்த குனங்குடி அனிபா, அலி அப்துல்லா, முஷாரப் அலி, ஏர்வாடி காசிம், ஆருண் இஸ்மாயில், அப்துல் ரகீம், ஷாஜி முகமது ஆகியோர் மற்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான புருஷோத்தமன், சகாயம் மற்றும் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, அய்யப்பன், ராஜா, மைனர் குரோஸ் ஆகிய 13 கைதிகள், நளினிக்கு ஆதரவு தெரிவித்து அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
தங்களையும், 18 வருடங்களாக வாடி வரும் நளினியையும் விடுதலை செய்யக் கோரி இவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
கருணாநிதிக்கு நளினி கடிதம்:
இந் நிலையில் அண்ணா நூற்றாண்டையொட்டி தன்னை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நளினி, முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நான் கடந்த 18 ஆண்டு மற்றும் 3 மாதங்களாக தமிழ்நாடு சிறைகளில் இருக்கிறேன். எனது கணவர் வெ.ஸ்ரீகரன் வேலூர் மத்திய சிறையில் மரண தண்டனை சிறைவாசியாக இருக்கிறார்.
தங்கள் தலைமையிலான தமிழக அரசு 7 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் பூர்த்தி செய்த நூற்றுக்கணக்கான ஆயுள் சிறைவாசிகளை ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி விடுதலை செய்து வருகிறது. ஆனால், என்னை மட்டுமே தொடர்ந்து விடுதலை செய்யவில்லை.
சென்ற 18-7-2007 நாள் அறிவுரைக் கழகம் வாயிலான எனது விடுதலை கோரிக்கையை அரசாணை எண் டி-891 உள்துறை (சிறை) நிராகரித்துவிட்டது தமிழக அரசு. சென்ற ஆண்டு எனது வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை இதுவரை செயல்படுத்தவில்லை.
எனது பெற்றோர் மிகவும் வயதானவர்கள். பருவமடைந்த மகள். எனது ஆதரவும், அருகாமையும் அவசியமானதாக உள்ளது.
ஐயா, இந்த முறை அறிஞர் அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு நாளான செப்டம்பர் 15-ம் தேதியிலாவது ஏனைய ஆயுள் சிறைவாசிகளுடன் எனது விடுதலையையும் சாத்தியப்படுத்துமாறு தங்களை தாழ்மையுடனும், பணிவன்புடனும் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் நளினி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications