அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை ஐந்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி 1-7-2009 முதல் உயர்த்தி வழங்கப்பட்டதையொட்டி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கும் அகவிலைப்படியை 1-7-2009 முதல் ஐந்து சதவீதம் உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி 1-7-2009 முதல் முன் தேதியிட்டு, நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும்.
அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு ரூ.955 கோடியும், நடப்பாண்டில் ரூ.637 கோடியும் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் சங்கம் வரவேற்பு:
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் கோ.சூரியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையி்ல்,
மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வை முதல்வர் வழங்கி உள்ளார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
ஆனால் கருணையுள்ளம் கொண்ட முதல்வர் கேட்காமலேயே அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அகவிலைப்படி உயர்வின் மூலம் ரூ.300 முதல் ரூ.3,000 வரை ஊதியம் கூடுதலாக கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications