இந்திய வீரர் தலையை கொய்தவருக்கு ரூ. 1 லட்சம் தந்த முஷராப்
இஸ்லாமாபாத்: இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தலையை கொய்தா தீவிரவாதி ஒருவனுக்கு முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ்முஷராப் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கிய செய்தி தற்போது வெளிவந்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் இலியாஸ் காஷ்மீரி சமீபத்தில் பாகிஸ்தானின் வசிர்ஸ்தான் பகுதியில் நடந்த தாக்குதலில் அமெரிக்க படையால் கொல்லப்பட்டான்.
1990களில் ஜம்மு & காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த இவன் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவை பிரிவிலும் கமாண்டோவாக பணியாற்றியுள்ளான்.
கடந்த 2000ம் ஆண்டு, பிப்ரவரி 26ம் தேதி காஷ்மீரி மேலும் 25 தீவிரவாதிகளுடன் இணைந்து நைக்யால் பகுதியில் எல்லை தாண்டி வந்து இந்திய வீரர்கள் மீது கொரில்லா தாக்குதல் நடத்தியுள்ளான்
அவர்கள் இந்திய வீரர்களின் பதுங்கு குழியை சுற்றி வளைத்து, அதற்குள் வெடிகுண்டுகளை வீசினர். மேலும் அந்த சம்பவத்தில் காயமடைந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரை கடத்தி சென்றனர்.
பின்னர் அந்த வீரரின் தலையை துண்டித்த அவன், அதை முஷராப் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் முன் கொடுத்துள்ளான். அவனது இந்த செயலை பாராட்டி அப்போதைய ராணுவ தளபதி முஷராப் அவனுக்கு ரூ. 1 லட்சம் பரிசு கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று அந்த இந்திய வீரரின் தலையுடன், காஷ்மீரி இருக்கும் படத்தை வெளியிட்டதை அடுத்து உண்மை வெளியே வந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications