மதுரவாயல் டூ துறைமுகம் மேம்பால பணிகள் நவம்பரில் துவக்கம்
சென்னை: சென்னையில் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை துறைமுகத்தை இணைக்கும் சுமார் 19 கிமீ மேம்பால பணிகள் வரும் நவம்பரில் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமான பணிகளை செய்துவரும் ஆந்திராவை சேர்ந்த சோமா என்டர்பிரைஸ் நிறுவனம் தான் இந்த மேம்பால பணிகளையும் செய்ய இருக்கிறது. இதை 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சக செய்திகள் கூறுகையில்,
சுமார் 1655 கோடி மதிப்பில் செய்யப்படும் கூவம் நதிப்பகுதியில் வசிக்கும் சுமார் 12 ஆயிரம் குடும்பங்கள் வேறு பகுதிக்கு அப்புறப்படுத்தப்படும். தமிழக பொதுப்பணித்துறை மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகியவை தேவையான நிலங்களை கையப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக ரூ. 345 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை மூலம் துறைமுகத்துக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருப்பி அனுப்படுவதால் பூந்தமல்லி ஹைரோட்டில் போக்குவரத்து வெகுவாக குறைந்துவிடும்.
நாட்டின் போக்குவரத்து துறை முன்னேற்றத்துக்கான முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம சென்னையின் பொருளாதாரம் வளரும்.
இந்த மேம்பாலம் கோயம்பேடு வரை கூவம் நதியை ஒட்டி செல்லும். பின்னர் அங்கிருந்து பூந்தமல்லி ஹைரோடு வழியாக மதுரவாயல் வரை செல்லும். இது காலேஜ் ரோடு, நுங்கம்பாக்கம், சேத்பேட்டை, சூளைமேடு ரயில்வை மேம்பாலம், அரும்பாக்கம் வழியாக கோயம்போடு செல்கிறது.
ஏற்கனவை மூன்று கிமீ., தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற் பேட்டை மேம்பாலம், இந்த திட்டம் முடிந்தவுடன் பயன்பாட்டுக்கு வரும் என்கிறது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications