பிரதீபா பாட்டீல் மகன் காங். டிக்கெட்டில் தேர்தலில் போட்டி
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மகன் ராஜேந்திர ஷெகாவத் மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி அவருக்கு அவருக்கு டிக்கெட் கொடுத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அம்ராவதி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். கடும் போட்டிக்கு மத்தியில்தான் ராஜேந்திர ஷெகாவத்துக்கு டிக்கெட் கிடைத்துள்ளது.
அம்ராவதி தொகுதியில் போட்டியிட மகாராஷ்டிர நிதித்துறை இணை அமைச்சர் சுனில் தேஷ்முக் டிக்கெட் கேட்டிருந்தார். கடந்த 2004 தேர்தலில் இவர் 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். இம்முறையும் அதே சீட்டை கேட்டிருந்தார். இருப்பினும் பிரதீபா பாட்டீல் மகனுக்கு தற்போது டிக்கெட் தரப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக ராஜேந்திர ஷெகாவத்துக்கு டிக்கெட் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்சிக்குள் அதிருப்தியும் எழுந்துள்ளது.
இத்தொகுதியில் முன்பு ராஜேந்திர ஷெகாவத்தின் தந்தையும், பிரதீபா பாட்டீலின் கணவருமான தேவிசிங் ஷெகாவத் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications