தேர்தலில் போட்டியிட மாட்டேன்- கலாவதி பல்டி
மும்பை: மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தி புகழ் கலாவதி பந்துர்கர் தற்போது போட்டியிடப் போவதில்லை என்று பல்டி அடித்து விட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான கலாவதி. கணவரை இழந்த இவர் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுகையில் கலாவதியின் நிலை குறித்து விரிவாகப் பேசியதன் மூலம் நாடு முழுவதும் இவரது பெயர் உச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில், வருகிற அக்டோபர் 13ம் தேதி நடைபெறவுள்ள மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் வானி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விதர்பா ஜனாந்தோலன் சமிதி சார்பி்ல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கலாவதி.
இதனால் காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சி அடைந்தது. இந்த நிலையில் தான் தேர்தலி்ல் போட்டியிடப் போவதில்லை என்று கலாவதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைக் கட்டாயப்படுத்தி வேட்பாளராக அறிவித்துள்ளனர். எனக்கு தேர்தல் குறித்தோ, அரசியல் குறித்தோ எதுவும் தெரியாது. எனவே நான் போட்டியிடவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
