ஓசோன் படல ஓட்டை சுருங்கி வருகிறது!
மெல்போர்ன்: ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை சுருங்கி வருவதாகவும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அது முற்றிலும் மறைந்து போய் விடும் எனவும், இதனால் கிழக்கு ஆஸ்திரேலியாவில் வறட்சி நிலை மாறி அங்கு நல்ல மழைப் பொழிவு கிடைக்கும் எனவும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஓசோன் படல ஓட்டை காரணமாக உலக சுற்றுச்சூழல் பல்வேறு அபாயங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், ஓசோன் படல ஓட்டை சுருங்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெல்போரன் வானிலை ஆய்வு மைய தலைவர் மாத்யூ துலி கூறுகையில், புவி வெப்பமாதலுக்கு எதிரான பல்வேறு காப்பு நடவடிக்கைளை பல்வேறு நாடுகளும் எடுக்குத் தொடங்கி விட்டன. சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஓசோன் படல ஓட்டை சுருங்கத் தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையை மேலும் சிறப்பாக்கி தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், புவி வெப்பத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக்கினால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஓசோன் படல ஓட்டை முற்றிலும் மறைந்து விடும்.
இதன் காரணமாக கிழக்கு ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் நிரந்தர வறட்சி மறைந்து அங்கு நல்ல மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications