200 கிலோடன் திறன் கொண்ட அணுகுண்டு தயாரிக்க முடியும்-ககோத்கர்
மும்பை: 1998ல் நடந்த அணு சோதனை முழு வெற்றிதான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. இந்தியாவால் 200 கிலோடன் திறன் கொண்ட அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளார் அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர்.
1998ல் பொக்ரானில் நடந்த அணு குண்டு சோதனை குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து இதுகுறித்து விளக்கினார் ககோத்கர்.
அப்போது அவர் கூறுகையில், 1998ல் நடந்த சோதனையின்போது முழு இலக்கையும் விஞ்ஞானிகள் எட்டினர். அதில் வெற்றியும் பெற்றனர்.
இந்தியாவால் 200 கிலோடன் திறன் கொண்ட அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும். எனவே 1998ல் நடந்த சோதனை முழு வெற்றி பெற்றது என்பதை மறுபடியும் தீர்க்கமாக தெரிவிக்க விரும்புகிறேன். நமது நோக்கம் அந்த சோதனையின்போது நிறைவேறியது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
200 கிலோ டன் திறன் கொண்ட அணு குண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளை நம்மால் தயாரிக்க முடியும். அந்தத் திறமை நம்மிடம் உள்ளது.
பொக்ரான்-2 அணு சோதனைகள் குறித்த சர்ச்சை தேவையில்லாதது என்றார் ககோத்கர்.
1998ல் அணு சோதனை நடந்தபோது பாபா அணு ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்தவர் ககோத்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications