செக்ஸ் அவசியம்..இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ்!

இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மற்றும் மன நல நிபுணர் பேடி அப்டன் ஆகியோர் இணைந்து நான்கு பக்கங்களில் இதுகுறித்து விளக்கி இந்திய வீரர்களுக்குக் கொடுத்துள்ளனராம்.
அதில், செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால், டெஸ்டோஸ்டிரான் அளவு கூடும். இதனால் உடலுக்கும், மனதுக்கும் புதுத் தெம்பு கிடைக்கும், ஆவேசம் வரும். போட்டிகளில் முழுத் திறமையை வெளிப்படுத்த உதவும். அதற்கு மாறாக சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ளாவிட்டால் இவை அனைத்தும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அறிக்கையில், செக்ஸ் தவிர சரியான முறையில் சாப்பிடுவது, சுய முன்னேற்றம் உள்ளிட்ட பலவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அங்கு சென்றுள்ளது.
இந்திய அணியினர் செக்ஸ் குறித்து தயக்கமோ, அச்சமோ படக் கூடாது என்றும் கிர்ஸ்டனும், அப்டனும் அட்வைஸ் செய்துள்ளனராம். மேலும் செக்ஸ் குறித்த தவறான நம்பிக்கைகளைக் களையவும் அவர்கள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
செக்ஸ் தவிர உணவுப் பழக்க வழக்கம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வயிற்றில் அசிடிட்டி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது எப்படி, உடற்பயிற்சி வழக்கங்கள், சர்க்கரை வியாதி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி, என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளதாம்.
இவை தவிர மனதை ஒருமுகப்படுத்தி வைத்துக் கொள்வது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
நான்காவது அம்சமாக, வெளிநாடுகளுக்குப் போய் விளையாடும்போது இந்தியா அதிக அளவில் தோல்வியுறுவது ஏன் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இதை விளக்க இந்தியாவின் வரலாறு மற்றும் இந்தியா புரிந்த போர்கள் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டி பயிற்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனராம்.
இந்த அறிக்கை இந்திய வீரர்களுக்கு எந்த அளவுக்கு உதவப் போகிறது, புத்துணர்ச்சியுடன் அவர்கள் ஆடுவார்களா என்பதை சாம்பியன்ஸ் டிராபியின் முடிவில்தான் தெரிந்து கொள்ள முடியும்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications