வேலைப்பளு கேலிக் கூத்தாம் - மீண்டும் சர்ச்சையில் சசி தரூர்
டெல்லி: எகானமி வகுப்பை மாட்டுத் தொழுவம் என்று விமர்சித்து வாங்கிக் கட்டிக் கொண்ட சசி தரூர் மறுபடியும் ட்விட்டர் மூலம் புதுப் பிரச்சினையை உருவாக்கியுள்ளார்.
இம்முறை தனது வேலைப்பளு குறித்துப் புலம்பியுள்ள சசி தரூர், 17 மணி நேரம் வேலை பார்ப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறியுள்ளார்.
தனது வேலைப்பளு குறித்து ட்விட்டரில் சசி தரூர் வெளியிட்டுள்ள புதிய செய்தியில், கிட்டத்தட்ட 17 மணி நேரத்திற்கு நாளை வேலை பார்க்க வேண்டியுள்ளது. இது கேலிக்கூத்தாக உள்ளது. ஒரு பயணத்திலிருந்து வந்த பின்னர் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். (லைபீரியா பயணத்திலிருந்து வந்ததைச் சொல்கிறார்)
மலை போல கோப்புகள் குவிந்து கிடக்கின்றன. ஒரு வாரம் நான் டெல்லியில் இல்லை. எனவேதான் இந்த நிலை. இரண்டு பத்திரிக்கையாளர்கள் என்னை ஆப்பிரிக்காவில் வைத்து பேட்டி கண்டனர் என்று கூறியுள்ளார் சசி தரூர்.
வேலைப்பளுவை கேலிக் கூத்து என்றும், கோப்புகள் குவிந்து கிடக்கிறதே என்று சலித்துக் கொண்டும் அவர் எழுதியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மத்திய அமைச்சர் பதவி என்பது பெட்டிக் கடையில் உட்கார்ந்து பீடி, சிகரெட் விற்பதைப் போல என்று நினைத்து விட்டாரோ என்னவோ ...!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications