பெரும் சிக்கலில் பாரமவுண்ட் ஏர்வேஸ்!

டியூப்ளினைச் சேர்ந்த இசிசி லீசிங் கம்பெனி என்ற அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில்,
பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு Embraer 170 LR ரகத்தைச் சேர்ந்த இரு விமானங்களை 5 ஆண்டு குத்தகைக்குத் தந்தோம். இதற்கான ஒப்பந்தம் 5.5.2005ல் கையெழுத்தானது. இதற்கு மாத வாடகையாக 1.85 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்க வேண்டும்.
ஆனால், 2007ம் ஆண்டுக்குப் பின் மாத வாடகை பணத்தை பாரமவுண்ட் ஏர்வேஸ் தரவில்லை. இதையடுத்து குத்தகையை ரத்து செய்து நோட்டீஸ் அனுப்பினோம்.
மேலும் இரு விமானங்களையும் போர்சுகல் நாட்டில் உள்ள எங்கள் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டோம். இதையடுத்து பாரமவுண்ட் நிறுவனம் கடந்த மாதம் 5ம் தேதி 11,09,780 டாலர்களை மட்டும் செலுத்தியது.
ஆனால், இன்றைய தேதி வரை அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய மீதித் தொகை 12,58,085 டாலர்களாகும். இது தொடர்பாக பாரவுண்ட் ஏர்வேசுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயன்றோம். ஆனால், அவர்கள் அதைத் தவிர்த்து வருகின்றனர்.
இதனால் ஒரு அட்வகேட் கமிஷனரை நீதிமன்றம் உடனே நியமித்து, அந்த இரு விமானங்களை எங்கு பார்த்தாலும் உடனே கையப்படுத்த உத்தரவிட வேண்டும். விமானத்தை இயக்குவதற்கு அவர்கள் ஏதாவது புதிய 'லாக்' பொறுத்தியிருந்தால் அதையும் நீக்கி, விமானத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்.
தேவைப்பட்டால் விமானத்தை நீதிமன்றமே தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் ஆவணங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளது இசிசி லீசிங் கம்பெனி.
இந்த வழக்கு நீதிபதி பால்வசந்தகுமார் முன் விசாரணைக்கு வந்தது. பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.
மேலும் 2 மாதத்துக்கான பாக்கித் தொகையை இம் மாதம் 30ம் தேதிக்குள் தருவதாகவும் உத்தரவாதம் அளித்தார்.
இதையடுத்து வழக்கை அக்டோபர் 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
பாரமவுண்ட் ஏர்வேஸ் அதிபரான தியாகராஜன் தமிழகத்தைச் சேர்ந்த கருமுத்து தியாகராஜன் செட்டியாரின் பேரன் ஆவார். கருமுத்து செட்டியார் தான் பேங்க் ஆப் மதுரையை நிறுவியவர். இந்த வங்கியைத் தான் தியாகராஜனின் குடும்பம் திடீரென ஐசிஐசிஐயிடம் விற்றது நினைவுகூறத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications