ராஜ்யசபா தேர்தல் - புதுவை கண்ணன் மனு தாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சரும், 3 முறை காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து மறுபடியும் இணைந்தவருமான கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அக்டோபர் 3ம் தேதி புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு ராஜ்யசபா தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. நாராயணசாமி ராஜினாமா செய்ததால் காலியிடம் ஏற்பட்டது. இதை நிரப்பவே தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கண்ணன், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியான சிவப்பிரகாசத்திடம் தனது மனுவை அவர் அளித்தார். அவரது பெயரை முதல்வர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் முன்மொழிந்திருந்தனர்.
கண்ணனையும் சேர்த்து ஐந்து பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
புதுவை சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணிக்கு 23 உறுப்பினர்கள் (மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 30) உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் 13 பேர் உள்ளனர். திமுக 7, மற்றவர்கள் 3 ஆவர்.
எதிர்க்கட்சியினருக்கு சட்டசபையில் 7 பேர் உள்ளனர். தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications