போர்ப்ஸின் பேபுலஸ் 50 பட்டியலில் 13 இந்திய நிறுவனங்கள்

மிகப் பெரிய ஜாம்பவான்கள் முதல் சாதாரண நிறுவனங்கள் வரை பல வகையான நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பதாக போர்ப்ஸ் ஆசியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாப் 10 பட்டியலில் இந்தியாவின் ரிலையன்ஸ், இன்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இவை தவிர அடானி என்டர்பிரைசஸ், ஆக்சிஸ் வங்கி, ஜின்டால் ஸ்டீல் அன்ட் பவர், பெல், லார்சன் டூப்ரோ ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் 16 நிறுவனங்களுடன் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2வது இடம் இந்தியாவுக்கு.
சீன நிறுவனங்கள் 16ல் தைவானைச் சேர்ந்தவை 5 மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்தவை 3 ஆகும்.
தைவான் நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. அந்த நாட்டைச் சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை தலா நான்கு நிறுவனங்களுடன் 4வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.












Click it and Unblock the Notifications