திருவண்ணாமலையில் பட்டாசு வெடித்து 2 மாடி வீடு தரைமட்டம்- 11 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த வீட்டில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 2 மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டடம் நொறுங்கி தரைமட்டமானது. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை முகல் புறா தெருவைச் சேர்ந்தவர் பாபா பாய். ஜவுளி வியாபாரி. தனது சொந்த வீட்டின் தரை தளத்தில் வசித்து வருகிறார். அதற்கு மேல் 2 மாடி கட்டிடங்களை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த 2 மாடியிலும் இரு குடும்பத்தை சேர்ந்த 15 பேர் வசித்து வந்தனர்.
பாபா பாய் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வாங்கி வைத்து விற்பனை செய்வாராம். அதே போல் இந்த ஆண்டும் ஏராளமான தீபாவளி பட்டாசுகளை தன்னுடைய வீட்டில் வாங்கி வைத்து இருந்தார்.
நேற்று இரவு 9 மணி அளவில் பட்டாசுகளில் தீப்பிடித்தது. பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் தரைதளமும், 2 மாடிகளும் இடிந்து விழுந்து அந்த கட்டிடமே தரைமட்டமானது.
கட்டிடத்தில் இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். திருவண்ணாமலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
மற்ற உடல்களையும் மீட்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications