உள்ளாட்சி இடைத்தேர்தல்-திமுக, அதிமுக வேட்புமனு தள்ளுபடி!
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மானூர் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக, திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பகுதிகளுக்கு வரும் 7ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது.
நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் யூனியன் செந்தட்டியாபுரம் பஞ்சாயத்து தலைவர், தென்காசி 16வது வார்டு, மானூர் 6வது வார்டு, ஆலங்குளம் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கடங்கனேரி 1வது வார்டு, கடையநல்லூர் யூனியன், நயினாகரம் 1வது வார்டு, கழுநீர்குளம் 4வது வார்டு உள்ளிட்ட 14 காலியிடங்கள் உள்ளன.
இந்த 14 பதவிகளுக்கு மொத்தம் 47 பேர் மனுதாக்கல் செய்தனர். நேற்று வேட்புமனுக்கள் மீதான பரீசிலனை அந்தந்த பஞ்சாயத்து யூனியன் பிடிஓக்கள் முன்னிலையில் நடந்தது.
இதில் மானூர் யூனியன் 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விண்ணபித்த திமுகவின் சாந்தா, அதிமுக வேட்பாளர் ராஜேஸ்வரி ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் அதிமுக மாற்று வேட்பாளர் முத்துமாரி, திமுக மாற்று வேட்பாளர் மாரியம்மாள் ஆகியோருக்கு யோகம் அடித்தது. இவர்கள் இருவரும் தவிர சுயேட்சை வேட்பாளர் பாலம்மாள் என்பவரும் களத்தில் உள்ளார்.












Click it and Unblock the Notifications