மகாராஷ்டிர முதல்வர் மீது எம்எல்ஏ ஆதரவாளர் செருப்பு வீச்சு
நான்டெட்: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாத காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏவின் ஆதரவாளர் ஒருவர் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் மீது செருப்பை வீசினார்.
ஆனால் செருப்பு அவர் மீது படாமல் 'மிஸ்' ஆகிவிட்டது.
லோகா தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதாப் பாட்டீல் சிக்லிகர், கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசை ஆதரித்து வந்தார். இம்முறை காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் போட்டியிட விரும்பம் தெரிவித்தார்.
ஆனால், தேவைப்படும்போது இவரது ஆதரவை பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் சீட் தர மறுத்துவிட்டது. மேலும் இந்தத் தொகுதியை தனது கூட்டணிக் கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டது.
இதனால் பாட்டீலின் ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந் நிலையில் லோகா தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் சவாண் சென்ற போது அவரை பாட்டீலி்ன் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்தனர்.
அப்போது சவாணை நோக்கி செருப்பு பறந்து வந்தது. அதற்கு, அவர் நகர்ந்துவிட்டதால் செருப்பு அவர் மீது படவில்லை.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துவிட்டு முதல்வரை அவசரமாக அங்கிருந்து வெளியேற்றினர்.
செருப்பு வீசிய நபர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications