கருணாநிதி தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்: பொன்னையன்

சொந்த நாட்டில் அகதிகளாக உள்ள 3 லட்சம் இலங்கை தமிழர்களை மீண்டும் அவரவர் வீடுகளில் குடியமர்த்தக் கோரியும் அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சனைகளில் பறிபோகும் தமிழக உரிமைகளை பாதுகாக்கக் கோரியும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறியதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இந்த போராட்டத்தை துவக்கி வைத்து பொன்னையன் பேசுகையில்,
இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனர். கருணாநிதியை பொறுத்தவரை ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி தமிழகத் தமிழர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்.
நதி நீர் பிரச்சனைகளில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் கருணாநிதி. அதைப்போலவே ஈழத் தமிழர்கள் பிரச்சனையிலும் அவர்களுக்கு துரோகம் செய்து வருகிறார். அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையே தமிழர்கள் வெறுக்கிறார்கள்.
அகதி முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களையும், அவர்களுடைய சொந்த ஊர்களில் குடியமர்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன. இந்த விஷயத்தில் கருணாநிதி மீது தமிழர்கள் கொதிப்புடன் உள்ளனர்.
இதில் சோனியாவும், கருணாநிதியும் தலையிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை பெற்றுத்தரா விட்டால் அவர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார் பொன்னையன்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications