குஜராத்தில் கிராமமே இல்லை-சொல்கிறார் மோடி
டெல்லி: குஜராத்தில் கிராமங்களே இல்லை என்று கூறியுள்ளார் முதல்வர் நரேந்திர மோடி.
இதை அவர் கடந்த மாதம் டெல்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவற்றை சட்ட அமைச்சகம் தனது இணையத்தில் தற்போது தான் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.
சமீபத்தில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, வழக்குகளை விரைந்து முடிக்கவும், ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையிலும் இந்தியா முழுவதும் கிராம நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இது கிராம ராஜ்யம் விரும்பிய காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி நடைமுறைப்படுத்தப்படும் என கூறியிருந்தார்.
கூட்டத்தில் அது தொடர்பாக பேசும் போது மோடி மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தங்களது பகுதிகளில் கிராமங்களே இல்லை என பேசியுள்ளனர். ஷீலா தீட்சித் சொன்னது போல் டெல்லியில் கிராமம் எதுவுமில்லை. அனைத்தும் நகர்ப்புறம் ஆகிவிட்டது.
ஆனால், குஜராத்திலும் கிராமமே இல்லை என்று மோடி கூறியிருப்பது ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.
இது குறித்து சட்ட அமைச்சகம் தனது இணையத்தில் வெளியிட்டிருப்பதாவது:
கிராம நீதிமன்றங்கள் குறித்து பேசும்போது குஜராத் முதல்வர், தனது மாநிலத்தில் கிராமங்களே இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் அங்கு இந்த திட்டம் பயன் தருமா என தெரியவில்லை.
ஆனால், அவர் கிராம நீதிமன்றங்களுக்கு பதிலாக நடமாடும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications