தாய்-மகன் கொலை-கேரள ஜோதிடருக்கு தொடர்பு?
சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் அனந்தலட்சுமி மற்றும் அவரது மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரள ஜோதிடருக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மேற்குமாம்பலம் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் ராமசுப்பிரமணி. பெங்களூரில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனந்தலட்சுமி (39). மகன் சூரஜ் (12). கடந்த 24ம் தேதி பூட்டிய வீட்டில் தாயும் மகனும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதுதொடர்பாக தனிப் படைகள் அமைக்கப்பட்டு கொலையை செய்த ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சைதாப்பேட்டையை சேர்ந்த கேரள ஜோதிடர் ஒருவர் அடிக்கடி செல்போன் மூலம் அனந்த லட்சுமியிடம் பேசுவது வழக்கம் என்பது தெரியவந்தது.
மேலும் அவர் அனந்தலட்சுமியிடம் ஜாதப்படி தோஷம் உள்ளதால் கணவரை விட்டு நீங்கள் பிரிந்து இருக்க வேண்டும் என்றும், உங்கள் கணவர் பெங்களூரிலேயே இருக்கட்டும் என்றும் கூறியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கேரள ஜோதிடரை, பிடித்து அசோக் நகர் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜோதிடரின் நண்பர்கள் சிலருக்கும் அனந்த லட்சுமியை தெரியும் என்றும் போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே அனந்த லட்சுமியிடம் செல்போனில் பேசும் வேறு சிலருடைய விவரங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளன.
அனந்தலட்சுமிக்கு கிட்டத்தட்ட தினசரி நள்ளிரவில் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. பெருமளவில் வந்துள்ள இந்த அழைப்புகள் நள்ளிரவில் தான் வந்துள்ளன. மேலும், இந்த குறிப்பிட்ட எண்ணுக்கு அனந்தலட்சுமியும் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அவரும் நள்ளிரவில்தான் பேசியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இந்தக் கொலை வழக்கில் துப்பு துலங்கி இருப்பதாகவும், இன்னும் 2 நாட்களில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications