சென்னை-கொசுத் தொல்லை குறைந்துவிட்டதாம்!

இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கொசு அடர்த்தி என்பது ஒரு நிமிடத்தில் பிடிபடும் கொசுக்களின் எண்ணிக்கை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இந்த கணக்கிற்காக விசேஷ குழாய்கள் மூலம் கொசுக்கள் பிடிக்கப்படுகின்றன. அவற்றை கணக்கிட்டு பின்னர் 600 ஆல் பெருக்கி கொசு அடர்த்தி கண்டுபிடிக்கப்படும்.
இது 50 புள்ளிகளுக்கு குறைவாக இருந்தால் கொசு தொல்லை மிகவும் குறைவு என அர்த்தம். 51 முதல் 83 வரை இருந்த கொசு தொல்லை லேசாக இருப்பதாக கூறப்படுகிறது. 84க்கு அதிகமானால் கொசு தொல்லை அதிகம்.
கடந்த 12 மற்றும் 13ம் தேதி மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் சென்னையில் தண்டையார்பேட்டை, ஸ்டான்லி நகர், வண்ணாரபேட்டை, எம்ஜிஆர் நகர் மற்றும் மைலாப்பூர் கச்சேரி ரோடு ஆகிய இடங்களில் கொசு தொல்லை 80 புள்ளி அளவுக்கு இருப்பது தெரியவந்தது.
மேலும், அண்ணா நகரில் 72, ஜிஎன் செட்டி ரோட்டில் 64, லாய்ட்ஸ் ரோட்டில் 72 ஆக இருந்தன. இதையடுத்து மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு முறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டன.
இதையடுத்து மீண்டும் 19 மற்றும் 20ம் தேதி கொசு அடர்த்தி கணக்கெடுக்கப்பட்டது. அப்போது அனைத்து இடங்களிலும் இது 40க்கும் குறைவாக இருந்தது. அண்ணா நகரில் மட்டும் 48 ஆக இருந்தது என்றார்.
மாநகராட்சி சுகாதார அதிகாரி குகானாந்தம் கூறுகையில், ஆகஸ்ட் 31ம் தேதி முதல் கொசு மருந்து அடித்து வருகிறோம். கொசு உருவாகும் சூழ்நிலைய இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம். கால்வாய்கள், சேரி பகுதிகள், பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் தினமும் காலை மற்றும் மாலை மருந்து தெளிக்கப்பட்டது என்றார்.
சென்னை மேயர் சுப்ரமணியன் கூறுகையில், கடந்த ஆண்டை போலில்லாமல் இந்த ஆண்டு கொசு மருந்து அடிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் மூட்டையிடும் முக்கிய இடங்களாக வாய்க்கால்கள் மாறியிருப்பதால், அவற்றை தூர்வாறும் பணியையும் செய்து வருகிறோம் என்றார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications