யுஎஸ்-அழகு சாதன பொருட்கள் மூலம் குண்டு தயாரிக்க திட்டமிட்ட தீவிரவாதி
கொலராடோ: அமெரிக்காவில் கைதான அல்-கொய்தா தொடர்பு தீவிரவாதி நபிபுல்லா ஜசி அழகு பொருட்களில் உள்ள ரசாயனங்களை பிரித்தெடுத்து அவற்றின் மூலம் குண்டு தயாரிக்க முயன்றதாக அமெரிக்க போலீஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க போலீஸார் சமீபத்தில் அல்-கொய்தாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஆப்கானில் பிறந்து அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் நைபிபுல்லா ஜசி, அவரது தந்தை முகமது வலி ஜசி, அகமது வைஸ் அபசில் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், ஜசியின் லேப்டாப்பில் இருந்து வீட்டு உபயோக மற்றும் அழகு சாதன பொருட்களில் இருந்து வெடிகுண்டு தயாரிக்க எப்படி என்ற 9 பக்க குறிப்பு ஒன்று இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் அமெரிக்க போலீஸார் ஜசியை கைது செய்வதற்கு முன்னதாக டென்வர் நகர் பகுதியில் உள்ள அழகு சாதன பொருட்கள் கடையில் ஜசியின் போட்டோவை காட்டி விசாரணை நடத்தியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
விசாரணையின் போது ஜசி பல கடைகளில் அழகு சாதன பொருட்களை அதிகளவில் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அப்போது ஜசி, கடைக்காரர்களிடம் தனக்கு நிறைய கேர்ள் பிரண்ட் இருப்பதாகவும், தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களுக்கு கொடுப்பதற்காகவும் அதை வாங்குவதாக தெரிவித்தாராம்.
இந்நிலையில் இது குறித்து அட்டார்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் கூறுகையில், இந்த சதி திட்டம் குறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். 24 மணி நேரம் உழைத்து வருகிறோம்.
தற்போதைக்கு அமெரிக்காவுக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை. என்றாலும், அமெரிக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமானவர்கள் யாரும் நடமாடினால் சட்ட அமலாக்கு துறையினரிடம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் ஜசியின் வழக்கை கொலரடோவில் இருந்து விரைவில் நியூயார்க்கிற்கு மாற்ற முயன்று வருகிறோம். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றார்.
டிஏடிபி தயாரிக்க இருந்தனர்...
ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், ஜசியின் மனைவியும், குழந்தைகளும் பாகிஸ்தானில் தான் இருக்கின்றனர். அவருக்கு ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
அவர்கள் கடந்த 2008 ஆகஸ்டில் பாகிஸ்தான் சென்றுவிட்டு இந்த ஆண்டு ஜனவரியில் தான் அமெரி்க்கா திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தானில் ஆயுதங்களை பயன்படுத்தவும், வெடிமருந்துகளை தயாரிக்கவும் அல்-கொய்தாவிடம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அவனது லேப்டாபில் டிஏடிபி எனப்படும் டிரைஅசிடோன் டிரைபெராக்ஸைடு என்ற ரசாயனத்தை உருவாக்குவது தொடர்பான குறிப்பு உள்ளது.
இந்த டிஏடிபி ரசாயனத்தை தயாரிக்க நகபாலிசை நீக்கும் அசிடோன், தரையை கழுவ உதவும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான குறிப்பு உள்ளது. இவை சில அழகு சாதன பொருட்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவனது லேப்டாபில் முகசவர கிரிமீல் 20 முதல் 30 சதவீதம் ஹைட்ரஜன் பெராக்ஸைடு உள்ளது போன்ற குறிப்புகளும், ஹைட்ரஜன் பெராக்ஸைடை எப்படி மாவு, வெண்ணெய் போன்றவற்றுடன் இணைந்து குண்டு தயாரிப்பது போன்ற சில தகவல்களும் உள்ளது.
சதி திட்ட நோக்கத்தோடு தான் ஜசி, ஜூலை மற்றும் ஆகஸ்டில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு, அசிடோன் ஆகியவை அதிகமுள்ள அழகு சாதன பொருட்களை வாங்கியுள்ளான் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த டிஏடிபி சில நூறு கிராம் இருந்தால் கூட போதும் சில வினாடிகளில் பெரிய அளவில் குண்டுவெடிப்பை ஏற்படுத்திவிடலாம்.
இந்த ரசாயனம் மூலம் தான் கடந்த 2005ல் இங்கிலாந்தில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது அது போன்ற ஒரு நாசகார சம்பவத்தை அமெரிக்காவிலும் நடத்தி அல் கொய்தாவினர் திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications