இந்திய விமானி இலங்கையில் படுகொலை - உடல் மீட்பு
கொழும்பு: இலங்கையின் ஸ்ரீலங்கா ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய விமானி கொழும்பு அருகே படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நிலையில் நீர்கொழும்பில் அவர் வசித்து வந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது பெயர் ஜாய் ராமன் (45).
நீர்கொழும்பு, கனத்தை வீதியில் உள்ள அவரின் வீட்டின் மாடிப்படியில் ரத்த வெள்ளத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் தேதி வரை ஜாய் ராமன் பணிக்கு வந்துள்ளார். அதன் பின்னர் வரவில்லை. இதையடுத்து போலீஸாரை விமான நிறுவனம் அணுகியது. இதையடுத்து அவரது வீட்டுக்குப் போலீஸார் சென்றபோதுதான் ராமன் கொல்லப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது.
உடல் மிகவும் சிதைவடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து நீதிபதி நேரடியாக வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்.
அந்த அறையில் ஒரு ரத்தக் கறை படிந்த கத்தியும், செல்போனும் கைப்பற்றப்பட்டது. அறையில் இருந்த தண்ணீர்ப் பாத்திரத்திலும் ரத்தம் இருந்துள்ளது.
நீர்கொழும்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications