அமைச்சர் பங்கேற்ற புயல் நிவாரண விழாவில் தீ
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போக்குவரத்து துறை அமைச்சர் கேஎன் நேரு கலந்து கொண்ட அரசு விழாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விழா பாதியில் ரத்து செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு வீசிய நிஷா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கும் விழா திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கேஎன் நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழா துவங்கிய சிறிது நேரத்தில் மேடையின் இடது புறத்தில் இருந்த டூம் லைட் ஒன்று வெடித்துச் சிதறியது. இதை தொடர்ந்து மண்டபத்தில் இருந்த டியூப்லைட் மற்றும் பேன்கள் ஒவ்வொன்றாக வெடிக்க துவங்கியது.
அதிலிருந்து தீ மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதனால் இழப்பீடு வாங்க வந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்து, அலறியபடி ஓட்டம் பிடித்தனர். மண்டபம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதையடுத்து அமைச்சர் கேஎன் நேரு அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று மூன்று பேருக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை வழங்கி விட்டு சென்றார். பாதுகாப்பு கருதி விழா பாதியில் ரத்து செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications