நாகர்கோவில் 5 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி
நாகர்கோவில்: நாகர்கோவில் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகளுடன் நேற்று 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தமிழகத்தி்ல சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்து நாகர்கோவிலில் தான் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு இதுவரை சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பன்றி காய்ச்சல் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இங்கு சிகிச்சை பெற்று வந்த வத்சலகுமாரி என்ற பெண் கடந்த 22ம் தேதியும், நிஷா என்ற 8 மாத கர்ப்பிணி பெண் நேற்றும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.
இந்த அடுத்தடுத்த இரண்டு சம்பவங்கள் நாகர்கோவில் மக்களை பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் இந்த நோய்க்கு பலியான வத்சலகுமாரியின் கணவர் மனோகரன், மகன்கள் மனோஜ், கிருஷ்ணபிரசாத் ஆகியோரும் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் ராமன்புதூரை சேர்ந்த வில்லியம் என்பவரது மனைவி பெலிக்ஸ், வடசேரியை சேர்ந்த பிரான்சிஸ் ஆகியோரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெலிக்ஸ் லண்டனில் இருக்கும் தனது மகனை பார்த்து விட்டு சில நாட்களுக்கு முன் தான் ஊருக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடைய பலியான நிஷாவின் ஊரில் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் 309 பேர் பலி...
நேற்று மட்டும் இந்தியாவில் இந்த காய்ச்சலுக்கு சுமார் 6 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் இரண்டு பேரும், டெல்லி, ஆந்திரா, கேரளா, ஹரியானாவில் தலா ஒருவர் பலியாகி வருகின்றனர்.
இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications