18,000 எச்1பி விசாக்களை வாங்க ஆள் இல்லை
வாஷிங்டன்: அமெரிக்காவின் வேலைவாய்ப்புச் சந்தை தொடர்ந்து நலிவடைந்த நிலையில் இருப்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இன்னும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எச்1பி விசாக்கள் வாங்க ஆள் இல்லாமல் காத்துக் கிடக்கிறதாம்.
அமெரிக்க நாடாளுமன்றம் வேலைச் சந்தை மீது விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளே இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஒரு காலத்தில் கிடைக்காதா என்று எல்லோரையும் ஏக்கப் பெருமூச்சு விட வைத்த எச்1பி விசாவை, ஏறெடுத்துப் பார்க்கவும் இப்போது ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் இமிகிரேஷன் சேவை அமைப்பு வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, பொதுப் பிரிவில் 46,700 எச்1பி விசாக்கள் செப்டம்பர் 25ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் நிர்ணயித்த விசாக்களின் எண்ணிக்கை 65,000 ஆகும். அதாவது 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாக்கள் இன்னும் யாராலும் பெறப்படாமல் உள்ளது.
முக்கியமாக, கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுவோருக்கான விசாதான் எச்1பி விசா. கடந்த காலங்களில் இந்த விசாவுக்கு பெரும் கிராக்கி இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக எச்1பி விசாவைப் பெற ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம்.
கடந்த காலங்களில் 65 ஆயிரம் விசாக்களும் ஒரே நாளில் காலியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
நண்பனை கைவிட்ட அமெரிக்கா? நெதன்யாகுவுக்கு எகிறிய பிரஷர்.. உச்சத்தில் மத்திய கிழக்கு பதற்றம்! -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முடிவு.. விஸ்வரூபம் எடுக்க போகும் தங்கம்.. சீக்கிரமே எல்லாம் மாறும் -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications