பார்தி-எம்டிஎன் பேச்சு இரண்டாவது முறையாக முறிவு
டெல்லி: இந்தியாவின் தனியார் தொலைபேசி நிறுவனமான பார்தி ஏர்டெல் - தென்னாப்பிரிக்காவின் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான எம்டிஎன் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் முறிந்தது.
எதிர்பார்த்த மாதிரி இணக்கமான, ஒருமனதுடன் கூடிய ஒப்பந்தத்தை எட்ட முடியாததால் இரு நிறுவனங்களும் உடனடியாக பேச்சுவார்த்தையை கைவிடுவதென முடிவு செய்து அறிவித்துள்ளன.
மீண்டும் வருகிற மே மாதம் புதிதாக பேச்சுவார்த்தைகளைத் துவங்கப்போவதாக அறிவித்துள்ளன.
முழுமையான இணைப்பு குறித்ததாக இந்தப் புதிய பேச்சுக்கள் அமையும் என பார்தி - எம்டிஎன் நிறுவனங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, இந்த பேச்சு முறிவு பெரிய ஏமாற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் இதற்கு முழுக் காரணமும் அந்நாட்டு அரசுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இணைப்புக்குப் பிறகும் இரு நிறுவனங்களும் தொடர்ந்து இரு நாட்டு பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட வேண்டும் என தென்னாப்பிரிக்க அரசு விரும்புகிறது. ஆனால் இதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்க பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ள இந்த சூழலில், பார்தியிடமிருந்து கைமாறவிருந்த முதலீடு, பெரிய அளவிலான வெளிநாட்டு மூலதன வரவாகக் கருதப்பட்டது. இப்போது ஒப்பந்தம் ரத்தானதால், அந்த முதலீடு முற்றிலுமாக நின்றுபோயுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications