கர்நாடகம், ஆந்திராவில் பெரும் மழை- 36 பேர் பலி
பெங்களூர்: கர்நாடகம் ம்றும் ஆந்திராவில் பெய்து வரும் கன மழைக்கு 36 பேர் பலியாகியுள்ளனர்.
வடக்கு கர்நாடக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெரும் மழை பெய்து வருகிறது. அதேபோல ஆந்திராவிலும் பல பகுதிகளில் கன மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டுள்ளன. போக்குவரத்து, தகவல் தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மட்டும் 17 பேர் மழைக்குப் பலியாகியுள்ளனர்.
பெல்காம், கொப்பால், பெல்லாரி, ரெய்ச்சூர், பாகல்கோட், பீதர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
தலைநகர் பெங்களூரிலும் நேற்று மாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலைமை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் ...
ஆந்திர மாநிலத்தில் புதன்கிழமை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மகபூப் நகர், கர்னூல் மாவட்டங்களில் பல கிராமங்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்துள்ளன. குளங்கள் நிரம்பி வழிகின்றன. மகபூப் நகர் மாவட்டத்தில் 10 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
ஜட்சர்லா அருகே ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
அதே மாவட்டத்தில் இரு சம்பவங்களில் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். மின்னல் தாக்கி ஒருவர் கரீம்நகர் மாவட்டத்தில் இறந்தார்.
மகபூப் நகர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய ஐந்து மாணவர்களை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டனர்.
மகபூப் நகர் மாவட்டத்தில் 3 கிராமங்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு சிக்கியிருப்பவர்களை மீட்கும் முயற்சிகள் முடுக்கி
விடப்பட்டுள்ளன.
கர்னூல் மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தங்க 21 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திரும்பி வந்த அந்தமான் விமானம்:
இந் நிலையில் சென்னையில் இருந்து இன்று அதிகாலை 5.55 மணிக்கு ஏர் இந்தியா விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றது. போர்ட் பிளேர் விமான நிலையத்தை நெருங்கிய போது கடும் மேகமூட்டத்துடன் பலத்த மழை பெய்தது.
இதையடுத்து விமானம் தரையிறங்க இயலவில்லை. சுமார் 1 மணி நேரம் வானில் வட்ட மிட்ட பிறகு விமானம் சென்னைக்கே திரும்பி 11 மணிக்கு தரை இறங்கியது.
விமானத்தில் இருந்த 142 பயணிகளும் சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீண்டும் நாளை காலை இந்த விமானம் அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications