லதா மங்கேஷ்கர் தம்பி சிவசேனாவில் இணைந்தார்
Subscribe to Oneindia Tamil
மும்பை: பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் தம்பி ஹிருதயநாத் மங்கேஷ்கர் சிவசேனாவில் இணைந்துள்ளார். ஹிருதயநாத்தும் ஒரு இசையமைப்பாளர்.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலம் கோர்ஹே கூறுகையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை அவரது இல்லத்தில் சந்தித்து முறைப்படி தன்னை சிவசேனாவில் இணைத்துக் கொண்டார் ஹிருதயநாத் என்றார்.
71 வயதான ஹிருதயநாத் இசையமைப்பாளராக இருக்கிறார். லதாவின் தம்பி ஆவார்.
சமீபத்தில் ஏராளமான கலைஞர்கள் சிவசேனாவில் இணைந்தனர். இந்த வரிசையில் தற்போது லதாவின் தம்பியும் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications