டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி புதிய தமிழகம் நாளை பேரணி
சென்னை: ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாளை புதிய தமிழகம் கட்சியினர் டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்த இருக்கின்றனர்.
இது குறித்து கிருஷ்ணசாமி நேற்று சென்னையில் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கை முள்வேலி முகாம்களில் 3 லட்சம் தமிழர்கள் உணவு, குடிநீர், உடை, உறையுள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது உச்சக்கட்ட மனித உரிமை மீறல் பிரச்சினை ஆகும்.
தமிழர்களை முள்வேலியில் அடைத்து வைத்த சம்பவத்திற்கு மேலை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இதுநாள் வரை இந்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை. இது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
இதை கண்டிக்கும் வகையிலும், முடங்கிக்கிடக்கும் தமிழர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டியும், அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என கோரியும் நாளை 02.10.09 அன்று டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடைபெறும்.
பேரணியின் போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தினச்சம்பளமான 100 ரூபாயை முறையாக வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம்.
பிரதமர் மன்மோகன், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். கிடைத்தால் அவர்களிடம் இது குறித்து மனு கொடுப்போம் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் கலந்து கொள்ள நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் புதிய தமிழகம் தொண்டர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications