விபச்சார பெண்களுக்கு ரேட்டிங்-யுகே எதிர்ப்பு
லண்டன் லண்டன் உள்ளிட்ட நகரங்களில் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் விபச்சாரப் பெண்களுக்கு ஆண்கள் ரேட்டிங் கொடுக்கும் இணையத் தளத்தை உடனடியாக மூட கலிபோர்னியா கவர்னரான அர்னால்ட் ஸ்வார்சனீகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து மகளிர் மற்றும் சமத்துவ அமைச்சர் ஹெரியர் ஹர்மான் கூறுகையில், பன்டர்நெட் என்ற இணையதளம் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பெண்களை இழிவாகவும், தரக் குறைவாகவும் பார்க்கும் வகையி்ல இதன் செயல்பாடுகள் உள்ளன.
இது மோசமான, குரூர புத்தி கொண்ட செயலாகும். பெண்களை மோசமானவர்களாக காட்ட முயலும் செயலாகும். விபச்சாரப் பெண்களுக்கு ஆண்கள் ரேட்டிங் கொடுக்கலாம் என்று இந்த இணையதளம் கூறுவது அறுவறுக்கத்தக்கது.
இந்த இணையதளத்தில் புரோக்கர்கள் தங்களிடம் உள்ள விபச்சாரப் பெண்களின் விவரங்களைக் குறிப்பிட்டு வாடிக்கையாளர்களின் கருத்துக்களை வரவேற்றுள்ளனர்.
லண்டனில் உள்ள விபச்சாரப் பெண்கள் குறித்த விவரமும் இதில் உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தூதருடன் பேசியுள்ளேன். மேலும், இந்த இணையத்தளம் கலிபோர்னியாவிலிருந்து இயங்குவதால் அந்த மாநில ஆளுநர் அர்னால்ட் ஸ்வார்சனீகரும் உடனடியாக இந்த இணையதளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெர்மினேட்டர் படத்தில் நடித்தவரான அர்னால்டுக்கு இந்த இணையத்தளத்தை டெர்மினேட் செய்வது கடினமாக இருக்காது என்றார் அவர்.
இங்கிலாந்தில் விபச்சாரம் சட்டவிரோதம் அல்ல. இருப்பினும் அதுதொடர்பான விளம்பரம், பிரசாரம், தொலைபேசி எண்களை பகிரங்கமாக அறிவிப்பது போன்றவை குற்றச் செயல்கள். அதாவது விபச்சாரம் நடக்கலாம், ஆனால் இங்கு விபச்சாரம் நடக்கிறது என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications