கண்ணிவெடி அகற்றம் - இலங்கைக்கு ஐ.நா. தரும் ரூ. 25 கோடி

இலங்கையில் முள்வேலி முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தினமும் தவித்து வருகின்றனர். அவர்கள் விரைவில் தங்களது சொந்த வீடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இலங்கை அரசு வடக்கு பகுதியில் கண்ணி வெடிகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை என கூறி இழுத்தடித்து வருகிறது. மேலும், முகாம்களில் இருந்த தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, மனித உரிமைகளை மதிக்க தவறியது.
இந்நிலையில் இலங்கையின் மனித உரிமை துறை அமைச்சர் மஹிந்தா சமரசிங்கே, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடந்த ஐநா அகதிகள் ஆணையத்தின் 60வது செயற் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கேட்டு கொண்டதை அடுத்து, விரைவில் கண்ணிவெடிகளை அகற்றிவிட்டு தமிழர்களை குடியமர்த்தும் நோக்கில் இலங்கைக்கு ரூ. 25 கோடி நிதி உதவியை ஐநா அகதிகள் ஆணையம் வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரியில் துவக்கப்பட்ட இந்த கண்ணிவெடி சீரமைப்பு பணிகளை இலங்கை அரசு மந்த கதியில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
துவக்கத்தில் எடுக்கப்பட்ட சர்வேப்படி சுமார் 402 சதுர கிமீ பகுதிக்குள் 15 லட்சம் கண்ணி வெடிகள் இருப்பதாக கூறப்பட்டது. இதுவ ரை வவுனியா மாவட்டத்தில் 35 பிரிவுகளில் கண்ணிவெடிகள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டதாகவும், மேலும் 10 பகுதிகளில் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிந்துவிட்டது. 19 பகுதிகளில் நடந்து வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications