கேட்பாரற்று கிடக்கும் பள்ளி நூலகங்கள்-பாஜக
சென்னை: தமிழக பள்ளிகளில் காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மாணவர்களின் கல்வி தரம் மேம்பட நூலகங்கள் இன்றியமையாதவை. இதன் அடிப்படையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என பள்ளி கல்வி சட்டம் வலியுறுத்துகிறது.
ஒரு நூலகம் சிறப்பாக செயல்பட நல்ல இடம், நூல்கள், நூலகர் ஆகிய மூன்றும் அவசியம். ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் நூலகர்கள் இல்லாமல் நூலகங்கள் இயங்காமல் உள்ளன.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி கிராமப்புற மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் இதற்கெல்லாம் அடித்தளமாக திகழக்கூடிய பள்ளி நூலகங்கள் கேட்பாரற்று கிடப்பதை அவர் உணராதது ஏன்? என்பது தெரியவில்லை.
காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்களை சரியான நபர்களை கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும். பள்ளி நூலகங்கள் சிறப்பாக செயல்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications