சென்னை அருகே பயங்கர தீ - 70 குடிசைகள் சாம்பல்
சென்னை: சென்னை அருகே மேடவாக்கம், பெல் நகர் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 70 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.
மேடவாக்கம் பெல்நகர், அண்ணா மலைநகர் ஆகிய இடங்களில் ஏராளமான குடிசைகள் உள்ளன. நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் குடிசை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மற்ற குடிசைகளுக்கும் வேகமாக பரவியது.
குடிசைகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்கள். அப்போது 2 குடிசைகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்தன. இதனைத் தொடர்ந்து மேலும் பல குடிசைகளுக்கு தீ பரவியது.
மக்கள் தங்களது உடமைகளை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென்று பரவிவிட்டது.
தகவல் கிடைத்ததும் கோட்ட தீ அணைப்பு அதிகாரி பிரியா தலைமையில் தாம்பரம், கிண்டி, தேனாம்பேட்டை உள்பட 7 இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 7 குடிநீர் வாரிய லாரிகளும் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சுமார் 75 குடிசைகள் இந்த தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன.
பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இதில் எரிந்து சாம்பலாகி விட்டன. அனைத்துப் பொருட்களையும் இழந்த மக்கள் கதறி அழுதனர்.
பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications