இலங்கை துணை தூதரை வெளியேற்ற நெடுமாறன் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சம் தமிழர்கள் பார்வையிட யாரையும் அனுமதிக்க முடியாது என்றும், அது மிருககாட்சி சாலை அல்ல எனவும் இலங்கை துணை தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு முகாம்களை பார்வையிட அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரிக்கை எழுப்பியிருக்கும் வேளையில், அதை ஏளனம் செய்யும் வகையில் பேசியுள்ள துள்ள துணைத் தூதரின் போக்கு முதல்வரை மட்டுமல்ல, தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.
அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என முதல்வர், மத்திய அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications