ராமேஸ்வரம், நாகையில் சூறாவளி: கடல் கொந்தளிப்பு-மீனவர்கள் தவிப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் நாகை கடல் பகுதியில் கடும் கொந்தளிப்பு காணப்படுகிறது. பலத்த வேகத்தில் சூறாவளிக் காற்றும் வீசுவதால் மீனவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
16 நாட்களாக வேலைநிறுத்தம் முடித்து வேலைக்கு திரும்ப நினைத்த மீனவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் நேற்றும் தொடர்ந்து 2வது நாட்களாக பலத்த சூறாவளி வீசியது.
இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் படகுகள் கடலுக்கு செல்ல மீனவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு மீன்பிடி டோக்கனும் வழங்கப்படாது என மீன்வள துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் சுமார் 60 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தள்ளாடின.
தனுஷ்கோடிக்கு சுற்றுலா வந்தவர்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகினார்கள். சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், சில பயணிகளின் அரசின் தடையை மீறி குளித்தனர்.
சூறாவளி காரணமாக கடற்கரை அருகே இருந்த சாலை பகுதிகள் மணலால் மூடப்பட்டன. இதனால் வாகனத்தில் சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், அப்பகுதியில் இயக்கப்பட்ட ரயில்களும் பாதுகாப்பு கருதி குறைந்த வேகத்தில் சென்றது.
கடந்த 16 நாட்களாக இலங்கை ராணுவம் தாக்குவதை கண்டித்து போராட்டம் நடத்திய அவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு இன்று முதல் கடலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நிலையி்ல சூறாவளியால் அவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இன்றும்...
இன்றும் காலை முதல் ராமேஸ்வரம் மற்றும் நாகையில் பலத்த காற்றுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்களால் கடலுக்குள் போக முடியவில்லை.
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துரை, வேதாரண்யம் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications