மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் மீதான வழக்கு - பாக். கோர்ட் ஒத்திவைப்பு
இஸ்லாமாபாத்: மும்பைத் தீவிரவாத சம்பவத்தில் முக்கியத் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் செயல் பிரிவு தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட ஏழு பேர் மீதான வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிப் போட்டுள்ளது பாகிஸ்தான் தீவிரவாதத் தடுப்பு கோர்ட்.
ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய லக்வி உள்ளிட்ட ஏழு பேர் மீது பாகிஸ்தான் விசாரணை அமைப்பு தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது.
இவர்கள் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால் விசாரணையை தொடங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
இவர்கள் மீது செப்டம்பர் 26ம் தேதி குற்றச்சாட்டுக்கள் முறைபப்டி பதிவு செய்யப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியிருந்தார். ஆனால் அன்று அது செய்யப்படவில்லை. மாறாக அக்டோபர் 3ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. அப்போது நீதிபதி விடுமுறையில் போய் விட்டதாக கூறி ஒத்திவைத்தனர்.
இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மறுபடியும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வழக்கு ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்ற காரணத்தை கோர்ட் தெரிவிக்கவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications