100 உறவினர்களுடன் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதீபா

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் பிரதீபா பாடீலுடன் அவரது உறவினர்கள் சுமார் 100 பேரும் சென்றுள்ளனர். தற்போது இவர்களின் செலவுக்கு யார் பணம் கொடுப்பார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குஜராத் மாநில அரசு அதிகாரிகள் விழித்து வருகின்றனர்.

உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக இருந்து குடியரசுத் தலைவராக மாறிய அப்துல் கலாம் எளிமைக்கு பெயர் போனார். ஆடம்பர மாளிகை போல் இருந்த ஜனாதிபதி மாளிகை ஒரு சாதாரண இடமாக மாற்றியவர். மிக மிக சிக்கனமாக செயல்பட்டவர் கலாம்.

அவரை அடுத்து தற்போது குடியரசுத் தலைவராக பிரதீபா பாடீல் இருந்து வருகிறார். அடுத்த மாதம் 13ம் தேதி நடக்கவிருக்கும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அவரது மகன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதீபா, தன்னுடன் 100 உறவினர்களையும் அழைத்து சென்று இருக்கிறார்.

இவர்களுக்கு அங்குள்ள அரசு விருந்தினர் விடுதிகளில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சோம்நாத் கோவில், காந்தி பிறந்த போர்பந்தர், கிர் காடு மற்றும் துவாரகா கோவில் ஆகியவற்றுக்கு செல்ல இருக்கிறார் பிரதீபா.

பிரதீபாவுடன் கடந்த 30ம் தேதி 47 பேர் குஜராத் வந்தனர். மேலும் 45 ஜல்கோன் பகுதியில் இவர்களுடன் சேர்வார்கள், புசாவாலில் 25 பேர் சேருகின்றனர் என குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குஜராத் அரசுக்கு தகவல் போனது.

மகாராஷ்டிராவை சேர்ந்த இவர்களுக்காக குஜராத்தில் உள்ளூர் பகுதிகளை சுற்றி பார்க்க ஏசி பஸ் மற்றும் கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, குடியரசுத் தலைவருடன் வரும் இந்த மெகா உறவினர் கூட்டத்தின் செலவுகளை யார் ஏற்பார்கள் என்பதை இதுவரை குடியரசுத் தலைவர் மாளிகை சொல்லவில்லையாம்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இதற்கெல்லாம் யார் பணம் கொடுப்பார்கள் என தெரியவில்லை. அரசு தான் இதற்கான ஏற்பாடுகளை பார்க்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதை நாங்கள் சரியாக செய்து வருகிறோம். நாங்கள் கடன் வாங்கி சொந்த காசை போட்டு செய்கிறோம்.

குடியரசுத் தலைவரின் அலுவலர்கள் கூட, வந்திருப்பவர்களின் தனி செலவுகளுக்கு பணம் கொடுப்பது பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை என்றார்.

இந்த பயணத்தின் பெரும்பான்மையான இடங்களுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதிபாவுடன் செல்கிறார். மேலும், குஜராத் மாநிலத்தில் அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்களையும் அவர் பிரதீபா பாட்டீலிடம் எடுத்துக் கூறி வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+