பெயரை மாற்றும் தீவிரவாத இயக்கங்களை முடக்க பாக். புது சட்டம்
இஸ்லாமாபாத்: தடைவிதிக்கப்படும் ஒவ்வொரு முறையும் வேறு பெயரில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தீவிரவாத இயக்கங்களை ஒடுக்க பாகிஸ்தான் அரசு புதிய சட்டதிருத்தம் மேற்கொள்ள இருக்கிறது.
பாகிஸ்தானில் இருந்து இயங்கி வந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் கடந்த 2001ல் இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து இந்திய அரசு வற்புறுத்த வேறு வழியில்லாமல் பாகிஸ்தான், லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தானில் தடை விதித்தது.
ஆனால், இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹபிஸ் சையத் அமைப்பின் பெயரை மட்டும் ஜமாத் உத் தவா என மாற்றிவிட்டு வழக்கம் போல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின் ஜமாத் உத் தவா, லஷ்கருடன் தொடர்புடைய அமைப்பு என ஐநா பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ஜமாத் உத் தவா அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக பல முறை தெரிவித்தது. ஆனால் ஒரு முறை கூட அதை நடைமுறைப்படுத்தவில்லை.
இந்நிலையில் இது போன்ற பெயரை மாற்றி கொண்ட தொடர்ந்து தொல்லை தரும் தீவிரவாத இயக்கங்களை தடுக்க 1997ம் ஆண்டு தீவிரவாத தடுப்பு சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்படும் என பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது பெயர்களை மாற்றி கொண்டு புதிய அமைப்பை துவக்க முடியாது. அப்படி துவக்கினால் அந்த அமைப்பும் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே கருதப்படும். இது குறித்து அரசு விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட இருக்கிறது என்றார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications