துப்பாக்கி சூட்டில் உயிரை காப்பாற்றிய ரூ. 5 நாணயம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவரின் உயிரை அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 5 நாணயம் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்ட்டு வருகிறது.

மும்பையை சேர்ந்தவர் கிருஷ்ணா ஷெட்டி. இவர் கலினா பகுதியில் புஷ்பக் பார் மற்றும் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஒரு வினோத பழக்கம் உண்டு. அது பர்ஸை சட்டை பைக்குள் வைத்து கொள்வது தான்.

அவரது குடும்பத்தினர் பல முறை இந்த பழக்கத்தை மாற்றி கொள்ள கூறியும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை. தற்போது இந்த பழக்கம் தான் அவரது உயிரை காப்பாற்றியுள்ளது.

நேற்று இவரும், இவருடைய பக்கத்து வீட்டுக்காரர் நிக்கோலஸ் கோம்ஸ் என்பவரும் ஒரு வீடியோ கடை வாசலில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்த பக்கமாக பைக்கில் வந்த மூன்று பேர் கொள்ளையடிக்கும் நோக்கில் இவர்களை நோக்கி துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனர்.

இதில் ஒரு குண்டு கோம்ஸின் மீது பாய்ந்தது. இரண்டு குண்டுகள் கிருஷ்ணாவை நோக்கி வந்தது. அதில் ஒன்று கிருஷ்ணாவின் வயிற்றில் பாய்ந்தது. மற்றொன்று அவரது இதயத்தை நோக்கி பாய்ந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது சட்டை பையில் இருந்த பர்ஸில் விழந்தது. மேலும் அதிலிருந்த ரூ. 5 நாணயம் துப்பாக்கி குண்டை தடுத்து நிறுத்தியது.

இந்த சம்பவத்தை பார்த்ததும் பொதுமக்கள் அப்பகுதியில் கூடி விட்டனர். இதையடுத்து கொள்ளையர்கள் ஓடிவிட்டனர். குண்டடிப்பட்ட இருவரும் பந்த்ராவில் உள்ள குரு நானாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த ரூ. 5 நாணயம் மட்டும் இல்லையென்றால் குண்டு அவரது இதயத்தை துளைத்திருக்கும். அவரை உயிருடன் பார்த்திருக்க முடியாது என்றார்.

இதை கேள்விப்பட்ட கிருஷ்ணாவின் குடும்பத்தினர் அவரை காண கூட்டமாக வந்து போவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் படித்து வரும் அவரது மகன் தந்தையையும், அவரை காப்பாற்றி நாணயத்தையும் பார்க்கும் ஆசையில் விரைவில் இந்தியா திரும்ப இருக்கிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+