ஐஐஎம் அகமதாபாத்தில் சீன மொழி கற்கும் இந்திய மாணவர்கள்
அகமதாபாத்: எல்லைப் பகுதியில் இந்தியாவும், சீனாவும் முறைத்துக் கொண்டு நிற்கும் நிலையில், அகமதாபாத்தில் உள்ள இந்திய நிர்வாகவியல் கழகத்தில் (ஐஐஎம்) சீன மொழியைக் கற்பதில் இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 60 மாணாக்கர்கள் சீன மொழியை கற்று வருகின்றனராம்.
இவர்கள் அனைவரும் இறுதியாண்டு மாணவர்கள். ஐஐஎம்மின் முதுநிலை கல்வித் திட்டத்தின் சார்பில் சீன மொழியை இவர்கள் கற்று வருகின்றனர். சீனாவில் தற்போது பொருளாதாரம் நல்ல வளர்ச்சியைப் பெற்று வருவதால் அங்கு வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகி வருவதால் இவர்கள் தங்களது வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு சீன மொழியை கற்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்காக சீனாவின் ஜின்ஜியாங் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு ஆசிரியர் வரவழைக்கப்பட்டு இந்த மாணவர்களுக்கு பிசினஸ் சீன மொழியைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.
சீன மொழி தெரிந்திருந்தால் ஐஐஎம் டிகிரி வைத்திருப்பவர்களுக்கு சீனாவில் நல்ல டிமாண்ட் உள்ளதாம். இதனால்தான் சீன மொழியைக் கற்க ஐஐஎம் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து ரோஹன் சூரி என்ற மாணவர் கூறுகையில், அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் சீனா மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக உருவெடுக்கப் போகிறது. எனவே இந்தியர்களுக்கும் அங்கு பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள சீன மொழி தெரிந்திருப்பது அவசியமாகும்.
மேலும், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளும் அதிகரித்து வருகின்றன, வலுவடைந்து வருகின்றன. இதுபோன்ற சமயங்களில் அடிப்படை சீன மொழியறிவு இருந்தால்தான் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும்.
சீன கலாச்சாரம், மொழிப் புலமை, பேச்சுவழக்கு உள்ளிட்டவற்றை அறிய சீன மொழியை அறிய வேண்டியது அவசியமாகும் என்றார்.
மொழிக்கு ஏது எல்லை..?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications