பொங்கி வரும் வெள்ளம்- விஜயவாடா அணை உடையும் அபாயம்
விஜயவாடா: ஆந்திராவை அழிச்சாட்டியம் செய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தால், விஜயவாடா அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஆந்திரா, கர்நாடகாவை பெரும் மழை பெய்து வெள்ளக்காடாக்கி விட்டது. தற்போது மழை நின்று விட்ட போதிலும், வெள்ளக்காடாக காணப்படுகிறது இரு மாநிலங்களின் பல பகுதிகள்.
அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிவதால் அதிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள பெரும் நீரால் நிலைமை மோசமாகியுள்ளது.
ஆந்திராவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள ஸ்ரீசைலம், நாகார்ஜுனா சாகர், பிரகாசம் ஆகிய அணைகள் நிரம்பி விட்டன. இதனால் அனைத்து அணைகளிலிருந்தும் பெருமளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஸ்ரீசைலத்தில் இருந்து திறந்து விடப்பட்ட 11 லட்சத்து 72 ஆயிரம் கன அடி தண்ணீர் நாகர்ஜுனா சாகருக்கு வருகிறது. அங்கிருந்து 10 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் விஜயவாடாவில் உள்ள பிரகாசம் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் இன்று மதியம் அளவில் பிரகாசம் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரகாசம் அணை நிரம்பியுள்ள நிலையில் ஒரே நேரத்தில் இவ்வளவு தண்ணீர் வருவதால் அதை தாங்கும் அளவுக்கு பிரகாசம் அணை இல்லை. இது 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். எனவே தண்ணீரை தாங்கி கொள்ள முடியாமல் அணை உடையும் ஆபத்து உள்ளது.
பிரகாசம் அணை உடைந்தால் விஜயவாடா நகருக்குத்தான் பேராபத்து ஏற்படும். கிட்டத்தட்ட நகரமே அழிந்து போகும் அளவுக்கு அபாயம் உள்ளது. இதையடுத்து அங்கிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேரை அதிகாரிகள் விரைவாக வெளியேற்றியுள்ளனர்.
மேலும், நகரில் யாரும் இருக்க வேண்டாம். அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குப் போய் விட வேண்டும் என முதல்வர் ரோசய்யா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு வேளை அணை உடைந்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகளும் திட்டமிடப்பட்டு ஆயத்தமாக உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications