கொடநாட்டிலிருந்து சென்னை திரும்புகிறார் ஜெ.!
சென்னை: மே மாதம் 28ம் தேதி கொடநாடு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது நீண்ட ஓய்வை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார். அக்டோபர் 12ம் தேதி சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தோல்வியோடு கொடநாடு மலையேறினார் ஜெயலலிதா. அங்கேயே தொடர்ந்து தங்கி வந்த அவர் அங்கிருந்தபடியே அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
ஜெயலலிதா எப்போது வருவார் என்று அவரைத் தவிர வேறு யாருக்குமே புரியாத புதிராக இருந்து வந்தது. வருகிற 17ம் தேதி அதிமுகவின் 38வது ஆண்டு விழா வருகிறது. இதனால் நிச்சயம் அதற்குள் ஜெயலலிதா திரும்பி விடுவார் என்று நம்பப்பட்டது.
அதன்படியே ஜெயலலிதாவும் விரைவில் ஊர் திரும்புகிறார். வருகிற 12ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏழை தொழிலாளர்களுக்கு நிதி வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா கலந்து கொண்டு 45 தொழிலாளர்களுக்கு நிதி வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர் சென்னை திரும்புவது உறுதியாகியுள்ளது.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications