ஈரான் அணு குண்டு தயாரிக்க முடியும்-அணு சக்தி ஏஜென்சி

இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. ஈரானை முடக்க உடனடியாக கடும் நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச அணு சக்தி ஏஜென்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அணு குண்டு தயாரிக்கத் தேவையான தொழில்நுட்பத்தையும், அதற்குத் தேவையான பொருட்கள் குறித்த விவரங்களையும் ஈரான் ஏற்கனவே வைத்துள்ளது. தேவையான தகவல்கள் அதனிடம் உள்ளது. எனவே ஈரான் நினைத்தால் அணு குண்டு தயாரிக்க முடியும்.
அணு குண்டுத் தயாரிக்கத் தேவையான விவரங்கள் ஈரான் நாட்டிடம் இருப்பதை பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளிலிருந்துதான் ஈரான் பெற்றுள்ளதாக தெரிகிறது. அவற்றைப் பெற்று தனது தேவைக்கேற்ப அதை மாற்றியுள்ளதாகவும் அறிகிறோம்.
குண்டு தயாரிக்கத் தேவையான வடிவமைப்புத் தொழில்நுட்பத்தை ஏ.க்யூ. கான்தான் கொடுத்துள்ளார். அதேபோல, ரஷ்ய அணு விஞ்ஞானி ஒருவர் அடிக்கடி ஈரான் போயுள்ளார். அவர் மூலமும் பல்வேறு தகவல்களை ஈரான் பெற்றுள்ளதாக தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்க உளவுத்துறையினர், 2003ம் ஆண்டிலேயே ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியை தகர்த்து விட்டதாக கூறியிருந்தனர். ஆனால் ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான அனைத்து தகவல்களும், தொழில்நுட்பமும் உள்ளதாக சர்வதேச அணு சக்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்த செய்தியைத் தொடர்ந்து ஈரானை ஒடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி எம்.பிக்கள் அமெரிக்க அரசைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தையும் கூட்டி விவாதித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications