வயதை நிர்ணயிக்கும் 'டெலோமிரேஸ்'-கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நோபல்

ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட எலிசபெத் பிளாக்பெர்ன், கரோல் கிரேடர் மற்றும் ஜேக் சோஸ்டாக் ஆகியோர் இந்தப் பரிசை வென்றுள்ளனர்.
இதில் பிளாக்பெர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தி்ல் உயிரியல் துறை பேராசிரியராக உள்ளார். கிரேடர், பால்டிமோர் பல்கலைக்கழகத்தில் மரபியல் துறை பேராசிரியர் ஆவார்.
சோஸ்டாக், ஹாவர்ட் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் ஆவார்.
இந்த மூவரும் இணைந்து செல்களின் ஜீன்கள் எனப்படும் குரோமோசோம்களின் நீளம் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். குரோமோசோம்களில் உள்ள டி.என்.ஏக்களில உள்ள டெலோமியர் (telomeres) என்ற பகுதியின் பயன்பாடு குறித்து இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. அவை பயனற்ற பாகங்கள் (genetic junk) என்று தான் இகுவரை கருதப்பட்டு வந்தன.
ஆனால், இதன் பயன் என்ன என்பதை இவர்கள் இப்போது கண்டறிந்துள்ளனர். இந்த டெலோமியர் தான் குரேமோசோம்களின் நீளத்தை கட்டுப்படுத்துகிறது என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்மூலம் செல்கள் எத்தனை மி்ல்லியன் முறை பிரிந்தாலும் அதன் குரோமோசோம்கள் எப்படி ஒரே மாதிரியான நீளத்துடன் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
டெலோமிரேஸ் (telomerase) என்ற என்ஸைம் தான் இந்த நீளத்தை பாதுகாக்க உதவியாக உள்ளது என்பதையும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டெலோமியரின் நீளம் குறையும்போது தான் செல்களின் வாழ்நாள் குறைகிறது. இதனால் டெலேமியர் தான் நமது உடல் வயதாவதையும் வயது சார்ந்த நோய்களையும் நிர்ணயிக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக புற்றுநோய், இதய நோய்கள், அல்சீமியர்ஸ், எலும்புகள் தேய்வது, நீரிழிவு மற்றும் தோல் சுருங்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது டெலோமியர் தான்.
இந்த ஆய்வு முடிவுகள் இந்த நோய்களுக்கான சிகிச்சைகளுக்கும், உடலை இளமையாக வைத்துக் கொள்வது தொடர்பான சிகிச்சைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
டெலோமியரின் நீளத்தை அதிகரிக்கும் மருந்துகளை செலுத்தினால் செல்களின் வாழ்நாளை நீட்டித்து மனித வாழ்நாளையும் நீட்டிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உண்மையிலேயே அட்டகாசமான ஆராய்ச்சி தான்!.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications