மெர்சிடிஸை முந்தி முதலிடத்தை பிடிக்கும் பிஎம்டபிள்யு

Subscribe to Oneindia Tamil

மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய கார் என்ற அந்தஸ்தை விரைவில் இழக்க இருக்கிறது. இந்த பெருமையை பிஎம்டபிள்யு பெறப் போகிறது.

இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சமூகத்தின் கணக்கின் படி இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே கடந்த ஆண்டு விற்பனை வித்தியாசம் வெறும் 537 கார்கள். விரைவில் முதலிடத்தை பிஎம்டபிள்யு பிடிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் மெர்சிடிஸ் நிறுவனத்தில் வாகன தயாரி்ப்பு பொருட்களின் தேவையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு அவர்களது விற்பனை குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு விற்பனை செய்த 3,445 கார் என்ற அளவை இந்த ஆண்டு விறக முடியுமா என தெரியவில்லை என அந்த நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிஎம்டபிள்யு 2,908 கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் பிஎம்டபிள்யு 2305 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், மெர்சிடிஸ் வெறும் 1,876 தான் விற்றுள்ளது. அதாவது மெர்சிடிஸ் தனது முதலிடத்தை தக்க வைத்து கொள்ள கடைசி நான்கு மாதங்களில் பிஎம்டபிள்யுவை விட 429 கார்கள் கூடுதலாக விற்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் பொது இயக்குனர் வில்பிரட் ஆல்பர் கூறுகையில்,

தேவையை சமாளிக்க எங்களிடம் போதுமான கருவிகள் இல்லை. இதனால் நாங்கள் பெட்ரோல் என்ஜின்களை கொண்ட வாகனத்தை மட்டும் தயாரித்துள்ளோம். டீசல் என்ஜின்களை கொண்ட கார்களை தயாரிக்காததன் காரணமாக விற்பனை சரிந்திருக்கலாம்.

இந்த ஆண்டு 3 ஆயிரம் கார்களுக்கு மேல் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த இலக்கை விட சுமார் 13 முதல் 15 சதவீதம் அதிகம் தயாரிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+