கேரள அணை முயற்சி - அனுமதியை ரத்து செய்ய கருணாநிதி கோரிக்கை
சென்னை: கேரள அரசின் புதிய அணை தொடர்பான ஆய்வுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், 112 ஆண்டு பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், தேசிய வனவிலங்குள் வாரிய நிலைக்குழுவுக்கு கிடையாது.
இதுதொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, அணை நல்ல நிலையில், பாதுகாப்பான நிலையில் இருப்பதாக ஏற்கனவே சான்று அளித்துள்ளது.
இந்த நிலையில் தேசிய வன விலங்குகள் வாரியத்தின் தவறான தகவல்களின் அடிப்படையில் கேரள அரசு ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தனது அனுமதியை திரும்பப் பெற வேண்டும். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications